இராயப்பேட்டை :
மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த காங்கிரஸார்

சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் டி.எல்.வி.
தனலெட்சுமி அவர்களுக்காக 77வது வட்ட தலைவர் குபேந்திரன், 77வது (அ) வட்ட தலைவர் டி.ஏ.செல்வம் ஆகியோரது முன்னிலையில் 15 விருப்ப மனுக்களும்
காங்கிரஸ் 1வது சர்க்கிள் தலைவர் சூர்யா அவர்களின் மனைவி அமுதா அவர்களுக்காக 58வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி 6 விருப்ப மனுக்களும்,
மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்காக 78வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி வட்ட தலைவர்கள் மதன்,சேகர் ஆகியோர் 6 விருப்ப மனுக்களும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன் குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.