நடைபெற இருக்கின்ற நகர்புற சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் மாமன்ற அ.இ.அ.தி.மு.க சார்பில் 60 வட்டம் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தர கோரி சென்னை துறைமுகம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

மேலும் இந்த விருப்ப மனுவின் போது துறைமுகம் பகுதி கழக செயலாளர் கன்னியப்பன், எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன், வடசென்னை தெற்கு மேற்கு தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட கழக செயலாளர் ரஞ்சித் பெர்ணாண்டோ, ஆவின் அருள்வேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.