சென்னை:தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர் நலச் சங்கத்தின் சார்பில் இருபாலர் தங்கும் விடுதிக்கு தடை விதிக்க வேண்டும், வீடுகளுக்கு வழங்கும் கட்டணம் போல விடுதிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சொத்து வரியை மாற்ற வேண்டும், குடிநீர் கட்டணத்தை சீர்படுத்த வேண்டும், மின்சார கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், இரு பாலர் விடுதியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர் நல சங்க தலைவர் சீத்தாராமன் அவர்கள் பேசுகையில்:
மாதம்தோறும் 800 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை வணிக வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம் அதிலிருந்து வரி விலக்கு கொடுத்து இல்லங்களுக்கான மின் கட்டணமாக மாற்றி தர வேண்டும்,
அரசு மின்சார கட்டணத்தை குறைத்தால் நாங்களும் விடுதி கட்டணத்தை குறைக்க தயாராக இருக்கிறோம்,
இருபாலர் தங்கும் விடுதிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்,
விடுதியை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை அரசிடம் முறையிட்டுள்ளோம் ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை,
இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதற்கென தனிச் சட்டங்கள் இயற்றப்படவில்லை. இயற்ற வேண்டும் இந்த விடுதிகளில்  போதை வஸ்துகளை பயன்படுத்துகின்றனர் அதனால் அதனை தடைசெய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.