சென்னை: தமிழகப் பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஸ்ரீ எஸ்.எஸ் ஜெயின் கல்விச் சங்கத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, இன்று தனது 100-வது கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி நிர்வாகக் குழுவினர், முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாம் நாள் வரவேற்பு விழாவில், பள்ளி முதல்வர் திருமதி எம். மாலினி தொடக்க உரையாற்றினார்.
கடந்த1926 முதல் 2026 வரை நீளும் பள்ளியின் 100 ஆண்டு காலப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பேரணி அமைந்தது.

பள்ளி முதல்வர் திருமதி எம். மாலினி அவர்கள் தனது உரையில் பேசுகையில்,
வரலாற்றுச் சிறப்புமிக்க இப் பள்ளி கடந்த 100 ஆண்டுகளாக, நற்பண்புகளை வளர்த்தல், தலைவர்களை உருவாக்குதல் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கியக் குறிக்கொள்கள் மீது எமது பள்ளி உறுதியாக நின்று சீரிய முறையில் செயலாற்றி வருகிறது.
நாம் ஒரு புதிய கல்வி ஆண்டை மட்டும் தொடங்கவில்லை,
ஒரு புதிய நூற்றாண்டு குறிக்கோளை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி விழாவை தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி இணை இயக்குநர் வி. ஜெயக்குமார் அவர்கள் விழாவிற்கு வந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். முருகன் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் ஜே. பிரேமா கிறிஸ்டி மற்றும் சென்னை தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் முனைவர் பி. பூங்காவனம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீ அஸ்திமல் சோர்டியா, ஸ்ரீ கியான் சந்த் சோர்டியா மற்றும் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் மாலினி அவர்கள் தனது அறிக்கையில், நூற்றாண்டு தொடக்கவிழாவில் 7 முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டுப் பகிர்ந்து கொண்டார்: வரலாற்று சிறப்புமிக்க இவ்விழா பள்ளி வழிப்பாட்டுடன் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுடன் விழா இனிதே தொடங்கியது.
சிறப்பு விருந்தினர் “100 ஆண்டுகாலக் கனவுகள்” என்கிற தலைப்பில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். அதன் பின்னர், பள்ளி வாசலில் மாணவர் பேரவையுடன் இணைந்து, தலைமை விருந்தினர் நூற்றாண்டு விழாவில் ரிப்பன் வெட்டி முறைப்படி தொடங்கி வைத்தார்.
பலூன் வெளியீடு
100 வது ஆண்டின் தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாகவும், 100 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும் மாணவர்களின் எல்லையற்ற திறனை வெளிப்படுத்தும் விதமாக, பள்ளி முதல்வரும் சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பலூன் கூட்டத்தை விண்ணில் பறக்கவிட்டனர். அதனைத் தொடர்ந்து, பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வண்ணப் பலூன்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

“நமது பாரம்பரியக் கலை” பள்ளியின் பாரம்பரிய அங்கமாக விளங்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் நினைவாகப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேகமாகக் வடிவமைக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நூற்றாண்டு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. ஒற்றுமையின் அடையாளமாக, பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து, “நான் எனது 100 ஆண்டுகள் பழமையான பள்ளியின் பெருமை ஆவேன். நான் கண்ணியத்துடன் கற்று, முழு மனதுடன் சேவை செய்வேன்” என்று தங்களின் நூற்றாண்டு கால பள்ளி உறுதிமொழியை உணர்வுப்பூர்வமாக ஏற்றனர்.
“நமது பாரம்பரியத்தின் குரல்கள்” ‘காலத்தைக் கடந்த நினைவுகள் என்கிற தலைப்பில் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல தலைமுறைகளைக் கடந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்த பெற்றோர்கள் தங்களின் நெஞ்சம் நிறைந்த நினைவுகளையும் சான்றுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
நூறு ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும் பள்ளியின் பெருமையைப் போற்றும் வகையில், பள்ளியின் பெயர் அச்சிடப்பட்ட பிரத்யேகப் பலூன்கள் ஒவ்வொரு மாணவருக்கும் பெருமையின் அடையாளமாக வழங்கப்பட்டன.

தனது உரையின் நிறைவாக, பள்ளி முதல்வர் திருமதி எம். மாலினி, பள்ளி தாளாளர் ஸ்ரீ எஸ். அஜய் குமார் சோர்டியா, சுமித் சந்த் சோர்டியா, செயலாளர் ஸ்ரீ எ. சுமேர்சந்த் , எஸ் எஸ் ஜெயின் சொசைட்டி, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீ அஸ்திமல் சோர்டியா மற்றும் சந்த் சோர்டியா உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், பள்ளியின் முதுகெலும்பாகத் திகழும்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். நமது பெருமையையும் புகழையும் எதிர்காலத்தில் இன்னும் உன்னத உயரத்திற்குக் கொண்டு செல்ல, இந்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நாம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம் என்று கூறி முதல்வர் தனது உரையை நிறைவு செய்தார்.
