சென்னை:
சர்வதேச விளையாட்டு வீரரும்,சமூக சிந்தனையாளருமான முனைவர் எம். ஆர். சௌந்தரராஜன் அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தை இந்திய அளவில் மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தை வழங்கி மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.