சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.


மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின் ஓவிய படைப்புகளை காட்சிபடுத்தப்பட்டு காண்போர் வியந்து பாராட்டும் அளவில் இருந்தது.

இவ்வாரம் முழுவதும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசத்துடன் நடைபெற்று வரும் ஒவிய கண்காட்சி வருகின்ற 04.04.2026 அன்று பங்கு பெற்ற ஓவியர்களுக்கு விருதுகள் வழங்கி நிறைவு பெறவுள்ளது.