சென்னை:
இளம் பெண்களிடையே இரத்தச்சோகையை முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சுகாதார அறிவியல் வளாகத்தில், சவீதா செவிலியர் கல்லூரி சார்பில் அதிவேக ஹீமோகுளோபின் பரிசோதனை பெருமளவிலான இளம் பெண்களுக்கு இரத்தச்சோகை பரிசோதனை என்கிற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ உலகச் சாதனை முயற்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழிப்புணர்வு முயற்சியில் நான்கு மணி நேரம் என்கிற ஆரம்ப இலக்கைத் தாண்டி, இரண்டு மணி நேரத்திற்குள் 653 இளம் பெண்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினர்.
இந்த இரத்த சோகை பரிசோதனை பணிச் செயல்பாட்டை உறுதி செய்ய, மூன்று தளங்களில் ஒன்பது பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தச் செயல்முறையில் டிஜிட்டல் முறையில் ஒப்புதல் பெறுதல், கிருமியற்ற லான்செட்டுகள் மூலம் விரல் முனையிலிருந்து நுண் இரத்த மாதிரி எடுப்பது மற்றும் அளவுத்திருத்தம் செய்யப்பட்ட ஹீமோகுளோபினோ மீட்டர் கருவிகளின் மூலம், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஹீமோகுளோபின் அளவை கணக்கிடுதல் ஆகியவை இடம்பெற்றன.

குறைந்த ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்பட்ட பங்கேற்பாளர்களை சிகிச்சைக்காக சவீதா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த உலகச் சாதனை அங்கீகார விழாவில் முக்கிய பிரமுகர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ராபா உலகச் சாதனைப் புத்தகத்தின் நடுவர் நாட்டியாச்சார்யா திலகவதி அவர்கள் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து பதக்கமும் சான்றிதழும் வழங்கினார்.
இந்தச் சாதனை மதிப்பிற்குரிய வேந்தர் டாக்டர் என். எம். வீரையன், துணை வேந்தர் டாக்டர் தீபக் நல்லசாமி, இணை வேந்தர் டாக்டர் அஷ்வனி குமார், பதிவாளர் டாக்டர் ஷீஜா வர்கீஸ் ஆகியோரின் உறுதியான ஆதரவும் வழிகாட்டுதலும் காரணமாக சாத்தியமானது.

மேலும் சவீதா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா. விஜயலட்சுமி, துணை முதல்வர் டாக்டர். ல. பரிமளா , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காட்டிய அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்த குழுப் பணியும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
டாக்டர் சு. தமிழ்செல்வி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த முயற்சியை திட்டமிட்ட வகையில் வழிநடத்தி வெற்றிகரமாக செயல்படுத்தினார்.