சென்னை: சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS) 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இவ்விழால் எய்ம்ஸ் (AIIMS Rishikesh) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மீனு சிங் ரிஷிகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (இளைஞர் விளையாட்டு மற்றும் விளையாட்டு அமைச்சகம்) துணை இயக்குநர் ஜெனரல் மற்றும் மூத்த நிர்வாக இயக்குனருமான
வினித்குமார் அவர்கள்
சிறப்பு உரையாற்றினார் .
பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பசுபுலெட்டி முரளி மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரபல அறிஞர்கள், கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் நிறுவனத்தின் சாதனைகளை விரிவாக விளக்கிப் பேசினர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் செவிலியர் துறையைச் சேர்ந்த இளநிலை மாணவியான செல்வி லிப்னி “சிறந்த மாணவி (Overall Outstanding Student)” விருதும், “முன்னாள் மாணவர் நிதியுதவி (Alumni Endowment Award)” விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும் 6 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட இளநிலை மாணவர்கள் மற்றும் 15 முதுநிலை செவிலியர் மாணவர்களும் பட்டங்களை பெற்றனர். மற்றும் பல்வேறு துறைகளின் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழா மாணவர்களின் கல்வி சாதனைகளைப் பாராட்டும் விதமாக சிறப்பாக நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வேந்தர் டாக்டர் என். எம். வீரையன் அவர்கள் தலைமையேற்று பட்டங்களை வழங்கி, ஒழுக்கநெறி மற்றும் சமூக பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உயர்கல்வியில் மேலும் சாதனை படைக்க வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.