சென்னை :
மத்திய சேவை மற்றும் சரக்கு வரி சென்னை மண்டலத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 4 லட்சத்து 23 ஆயிரத்து 800 க்கான காசோலையை வழங்கினர்.

இந்நிகழ்வின் போது கண்காணிப்பாளர்கள் சங்க செயல் தலைவர் இளஞ்செழியன், துணைத்தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் டைட்டஸ் சாமுவேல்,பொருளாளர் நவீன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
