தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்!!
நாமக்கல்: தமிழ்ப் புலிகள் கட்சியின் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்
நாமக்கல் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று ஈரோட்டில் “வெல்லும் தமிழ்நாடு” என்கிற எழுச்சிமிகு மாநாடு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் சமூக நீதியை காத்திட, சமத்துவம் தழைத்திட , சகோதரத்துவம் மலர்ந்திட, மதசார்பின்மையை நிலைநாட்டிட , இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டம் ஏட்டளவில் இல்லாமல் எளியவர்க்கும் அச்சட்டம் நீதிநெறி தவறாமல் செயல்பட்டிட அடிப்படை உரிமைகள் வென்றெடுத்திடும் வகையில் இம்மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது.
எனவே அதற்கான செயல்பாட்டினை முன்னெடுக்கும் விதமாக ஓய்வு பெற்ற மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணிச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில செயலாளர் பலராமன் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில முதன்மைச் செயலாளர் முகிலரசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நாமக்கல் தொகுதி மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர் த. குமரவேல் அவர்கள் பேசுகையில்: ஈரோட்டில் நடைப்பெறும் எழுச்சிமிகு மாநாட்டில் ஒன்றினைவதன் மூலம்தான் முக்கியத்துவம் பெற முடியும் என்றார். இந்நிகழ்விற்கு மாநில வணிகர் அணிச் செயலாளர் சண்முகம், கரும்புலி குயிலி பேரவையின் மேற்கு மண்டல செயலாளர் அழகுமணி, குமாரபாளையம் தொகுதி மாவட்ட செயலாளர் அழகேசன், பரமத்தி வேலூர் தொகுதி மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் மாநகரச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, பரமத்தி தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் மணிவேல், நாமக்கல் ஒன்றிய செயலாளர் சிவகுமார், பரமத்தி ஒன்றிய பொறுப்பாளர் நேதாஜி உள்ளிட்ட தமிழ்ப்புலிகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் திறளாக கலந்து கொண்டனர்.
