நாமக்கல்:
தமிழ் புலிகள் கட்சியின் சார்பில்
தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் மேற்கு மண்டல நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நாமக்கல் நகரில் நடைப்பெற்றது.

மேலும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மற்றும் அருந்ததியர் இன மக்கள் சாதியவாதிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும், பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத,நாமக்கல் காவல்துறையை கண்டித்தும், காவல்துறை உயர் அலுவலர்கள் சாதிய மனநிலையோடும், ஒருதலை பட்சமாகவும் செயல்பட்டு வருவதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய நாகை திருவள்ளுவன் அவர்கள் தெரிவித்ததாவது:
பட்டியலின மக்களை தாக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தரும் புகார்களை நீர்த்துப்போக செய்யும் வகையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பாஜக கால் பதித்து விடக்கூடாது என்பதற்காக திமுக ஆட்சி அமைய தமிழகம் முழுவதும் தமிழ் புலிகள் கட்சி தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் செயல்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டை வைக்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி பட்டியலின மக்கள்மீது நடத்தப்படும் வன்முறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை உத்தரவிட வேண்டும்,
பட்டியலின மக்கள் மீதான உரிமை மீறப்படும் போதும், சாதிய பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட காவல்துறையின் முறையற்ற அராஜக செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக ஆதரவு நிலைப்பாட்டுடன் செயலாற்றினோம். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரிப்போம். இந்த தேர்தலில் தமிழ் புலிகள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்,திமுக அதற்கான வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்
2026- ல் திமுக மீண்டும் ஆட்சி அமைந்தால்தான் பாஜக போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாது.
மதுரையில் மதவாத போக்குகளை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் எங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டது,
பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு நடத்தும் முருகன் மாநாடு பக்தர்கள் மாநாடு அல்ல. பாஜக தமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை என்ற நிலமை வந்த பிறகு, கடவுளின் பெயரால் மத கலவரங்களை உருவாக்கி, அரசியல் செய்து கால் பதிக்கக்கூடிய அரசியலை வட மாநிலத்தில் செய்து வருகிறார்கள். கேரளாவில் ஐயப்பன், மகாராஷ்டிராவில் துர்கா, உத்தரபிரதேசத்தில் ராமர் என மாநிலத்திற்கு ஏற்றார் போல கடவுளை முன் வைத்து பாஜக அரசியல் ஆட்சி செய்கிறது.
அதேபோல தமிழகத்தில் முருக கடவுளை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு இழுக்கிறார்கள். ஆன்மீகத்தை அரசியலோடு தொடர்புபடுத்தக் கூடாது,
மதுரையில் நடைபெற்று வரும் முருகன் மாநாடு பொதுமக்களால் புறக்கணிக்க கூடிய மாநாடு ஆகும். இது மக்கள் நடத்துகிற மாநாடு அல்ல. ஒரு இயக்கம் நடத்துகிற மாநாடு பாஜக, ஆர்எஸ்எஸ் நினைக்கின்ற அரசியல் தமிழ்நாட்டில் எப்பவும் எடுபடாது. தமிழகத்தில் இந்து- முஸ்லிம் சகோதரராக பழகி வருகின்ற நிலையில் மதவாதிகளின் செயல்பாடுகள் எடுபடாது,
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆதரவு பெருகி வருகிறது. இன்னும் சில காட்சிகள் திமுக கூட்டணிக்கு வர உள்ளது. எனவே திமுகவிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்றும் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஹிட்டாச்சி சிவா, நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டாக்டர்.குமரவேல், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் வினோத் சேகுவேரா, மாதேஸ்வரன், சுரேஷ், அழகேசன் மற்றும் மாநில செயலாளர்கள் பேரறிவாளன், முகிலரசன், முத்துக்குமார், செல்வ வில்லாளன், ஆதி வீரன் உள்ளிட்டோர் காவல்துறையை கண்டன உரை ஆற்றினர்.

இறுதியில் மாநகர செயலாளர் தட்சிணாமூர்த்தி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.