சென்னை:
போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்று கூடல் நிகழ்வு
சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவர் தோழர்.வழக்கறிஞர் செ.விஜயகுமார் அவர்கள் தலைமையிலும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாகி தோழர் ஜிம் ராஜ் மில்டன் அவர்கள் முன்னிலையிலும் சென்னை உயர்நீதிமன்றம், ஆவின் நுழைவு வாயில் அருகில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில்
சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவர் வழக்கறிஞர். தோழர் செ.விஜயகுமார் அவர்கள் மனித நேய துவக்க உரையாற்றினார்.


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணைச் செயலாளர் தோழர்.மு.வீரபாண்டியன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இதில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளான
தோழர்.ச.சிவக்குமார்,
மாநில பொதுச் செயலாளர்-
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU)தோழர். சு.அருணாச்சலம்,மாநில பொதுச் செயலாளர்-இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (IAL),தோழர்.சுப.மனோகரன்,
தலைவர்- தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் பேரவை (TMVP),
தோழர்.மு.வெற்றிச்செல்வன்,
பூஉலகின் நண்பர்கள்,
தோழர்.விக்னேஷ் உதயன்,
மாநில துணைத் தலைவர்-
சனநாயக வழக்கறிஞர் சங்கம் (DAA),தோழர்.எ.பார்த்திபன்,
மாநில துணைச் செயலாளர்-
சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் (AAE),தோழர்.அ.ராஜா முகமது, மாநில பொதுச் செயலாளர்-
அகில இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் (AILC),தோழர். உ.அதியமான்,மத்திய குழு உறுப்பினர்-அகில இந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் (AILAJ),
தோழர்.வழ.மு.ஜைனுல் ஆபிதீன், மனித நேய வழக்கறிஞர் சங்கம் (MVS),தோழர்.ம.மோகநிதி,
சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம்.(LCD & SC) ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை – பொதுச் செயலாளர் தோழர்.டி.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் கண்டன இறுதியுரை ஆற்றினார்.

இறுதியில்
சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் (LCD & SC)-துணைச் செயலாளர் தோழர்.சி.ராஜகுரு அவர்கள் நன்றியுரை நல்கினார்.

காசா மற்றும் பாலஸ்தீனத்தில் பட்டினியால் வாடும் பொதுமக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து நிற்போம்,
உலகின் அனைத்து அணு ஆயுதங்களையும்,பெரும் சேதம் ஏற்படுத்தும் ஆயுதங்களையும் அழிப்போம்,
போரற்ற புது உலகம் படைப்போம்,
உலகின் அனைத்து உயிரினங்களையும்,இயற்கையையும் பாதுகாப்போம் என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மூத்த மற்றும் இளைய வழக்கறிஞர்கள் அனைவரும் இந்த மனித நேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.