சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓசை தொண்டு நிறுவன தலைவர் விஜீ சின்னசாமி அவர்களுக்கு சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் அதனை முன்னிட்டு
திருப்பத்தூர்
ஓசை தொண்டு நிறுவன தலைவர் விஜி சின்னசாமி அவர்களுக்கு பாராட்டு விழா திருப்பத்தூர் சி.கே.ஆசிரமம் வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆனந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஞானபிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழக அரசால் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுப்பெற்ற ஓசை தொண்டு நிறுவன தலைவர் விஜீ சின்னசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் முனைவர் ரமேஷ், சிவானந்தம், தசரதன் , ரவி, பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவா, மனோகரன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியில் ஓசை தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் ஓசை தொண்டு நிறுவன பொருளாளர் கோகுல் விஜி ஆகியோர் நன்றியுரை நல்கினர்.
