திருச்சிராப்பள்ளி:
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், சரஸ்வதி அறக்கட்டளை சார்பில் இதன் நிறுவனத்தலைவர் முனைவர் எல். சுரேஷ் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் சாதனையாளர்களுக்கு அவர்களின் அளப்பரிய சாதனைகளை மேலும் அங்கீகரிக்கும் விதமாக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்து அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் எளிய மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான முனைவர் குமரவேல் அவர்களின் சிறந்த சேவையை பாராட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சிறந்த சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்வேறு சமூகப் பணிகளின் அடிப்படையில் இவர் பெறப்பட்ட விருதுகள்:
சேவா ரத்னா விருது,
மக்களின் குரல் விருது,
சமூக செம்மல் விருது,
சிறந்த சமூக தன்னார்வலர் விருது,புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் விருது,தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் புதுவை மாநிலம் கம்பன் கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்களது பொற்கரங்களால் தன்னிகரில்லா சிறந்த சமூக சேவகர் விருது,
பன்னீர்செல்வம் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பாக சிறந்த சமூக சேவகர் விருது.
மகளிர் சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சேவை செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளின் அடிப்படையில்
ஆக்ஸ்வா பல்கலைக்கழகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்காக கின்னஸ் உலக சாதனையாளர் விருது வழங்கி கௌரிவிக்கப்பட்டது.
