சென்னை:
திமுக அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளரும், வழக்கறிஞமான பரமசிவம் அவர்களின் பிறந்தநாள் விழா கீழ்பாக்கம் கார்டன், தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.


இந்நிகழ்வில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்கள் கலந்துக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் பரமசிவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் இணைந்து அவரின் பெயர் தாங்கிய பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அண்ணாநகர் பகுதி, வட்ட கழக நிர்வாகிகள்,
வழக்கறிஞர்கள்,
மகளிரணியினர்
நண்பர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும்,
ஆளுயர ரோஜா மற்றும் துளசி மாலை அணிவித்தும்,
பூங்கொத்து அளித்தும்,பல்வேறு நினைவு பரிசு வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்
கொண்டனர்.