முகப்பேர்:
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்
கிடையேயான கலாச்சாரவிழா கல்லூரி திறந்தவெளி அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது.

இவ்விழாவில் 35 கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டின் கலைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
இவ்விழாவின் தொடக்கமாக மாணவர்களால் இறைவாழ்த்துப்பாடலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் கல்லூரிப் பாடலும் பாடப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் தொலைக்காட்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கர், செல்வி பெனிட்டா மரியா யாழினி பங்கேற்று சிறப்பித்தார்.
மேலும் கல்லூரிச் செயலர் அருட்தந்தை மேத்யூ பள்ளிக்குன்னல், கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகாந்த், சுழற்சி I இன் துணைமுதல்வர் முனைவர் காயத்ரி, சுழற்சி II இன் துணைமுதல்வர் முனைவர் சாலினி மெஹர், தேசியத் தர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சாந்தா, கலாச்சார விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் ரேகா, தனலட்சுமி ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
செல்வி அபர்ணா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் பேசிய பெனிட்டா மரியா யாழினி அவர்கள் தமிழர் கலைகளின் முக்கியத்துவம் குறித்து திறம்பட பேசினார். அசத்தல் பாடல்களைப்பாடி, மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
மேடையில் லைட் மியூசிக், அடாப்டியூன், குழு நடனம், பேஷன் வாக் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
அதே நேரத்தில், ADZAP, தனிப்பாடல், பிளாக் N டேக்கிள் மற்றும் ஷிப்ரெக் போன்ற ஆஃப்-ஸ்டேஜ் போட்டிகள் KCGSJ அரங்கத்திலும் மார் இவானியஸ் அரங்கத்திலும் நடந்தன.
மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்தோடு, கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்தினர்.
குழு நடனப் போட்டிகள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்த கலாச்சார நிகழ்வில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குசிறப்பு விருந்தினர், செயலர், முதல்வர் ஆகியோர்
பரிசுகள் வழங்கினர்.
ஸ்ரீபன் பூயுலன் நன்றியுரை நல்கினார்.
பல்வேறு போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை லயோலா கல்லூரி பெற்றது.
இறுதியாக நாட்டுப்பண் பாடப்பட்டது. விழா இனிதே நிறைவடைந்தது.
