நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிரா நல்லூர் பஞ்சாயத்து, குள்ளப்ப நாயக்கன்பட்டி அஞ்சல், நத்தக்காடு அண்ணா நகர் அருந்ததிர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஆவோம்.

நாங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததை தொடர்ந்து வாழ்ந்து வந்த வீட்டிற்கு பட்டா வேண்டி பல்வேறு முறை கோரிக்கைகள் கொடுத்து வந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எங்களுக்கெல்லாம் இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தனர். அதன் அடிப்படையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 -2016 கீழ் வீடுகள் கட்டியும், அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முறையாக கட்டி வந்த வீட்டு வரி ரசீது, பட்டா என அனைத்து அடிப்படை உரிமையும் பெற்று பூர்வீகமாக வாழ்ந்து வந்தோம். எங்கள் குடும்பங்கள் வாழ்ந்து வரக்கூடிய குடியிருப்புக்கு அருகில் இருக்கக்கூடிய மாற்று சமுதாயத்தைச் சார்ந்த நில உரிமையாளர் ஒருவர் நாங்கள் குடியிருந்து வரக்கூடிய நிலம் என்பது எங்களுடைய நிலம் எனவே இந்த நிலத்திலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடுப்பேன் என்று பலமுறை மிரட்டி வந்தார்.

நாங்கள் எவ்வளவோ சொல்லியும் எங்களுக்கு அரசு பட்டா கொடுத்துள்ளது இது எங்களுடைய பூர்வீக நிலம் எனவே நாங்கள் வெளியேற முடியாது என்று சொல்லிய நிலையில். பட்டியலின மக்கள் வசித்து வரக்கூடிய எங்களுக்கு எதிராக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்/நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு (R.E.P.NO.4/2022 in R.E.P.NO.39/2012 in O.S.645/1997) தொடுத்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக போதிய சட்ட அனுபவமும் எடுத்து நடத்துவதற்கான சரியான நபர்கள் இல்லாததால் இந்த வழக்கு ஒருதலைபட்சமாக எதிர்தரப்பிற்கு சாதகமாக அமைந்தது. இதனால் அப்பகுதியில் இருந்து கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி எங்களை வலுக்கட்டாயமாக புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சேர்ந்து நாங்கள் பூர்விகமாக அரசு கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் வைத்திருந்தும் பட்டா வைத்திருந்தும் எங்களை வலுக்கட்டாயமாக வீடுகளை விட்டு கடந்த 05.02.2025- ல் (நான்கு நாட்களுக்கு முன்பு) வெளியே அனுப்பி நாங்கள் குடியிருந்த வீடுகளை இடித்து தள்ளி விட்டனர். இதனால் எங்கும் நிலமும் வீடும் இல்லாததால் எங்கு செல்வது என்று அறியாமல் வருவாய்த் துறையிடம் எவ்வளவோ மன்றாடி நீங்கள் கொடுத்த பட்டா தானே இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு வேறு ஏதாவது வழியை காட்டுங்கள் என்று கேட்டபோது நீங்கள் மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுங்கள் என்று மேலோட்டமாக சொல்லி கடந்துவிட்டனர். இதனால் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்து எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க முடியாத அளவிற்கு தத்தளித்து வருகிறோம்.

எனவே வீடுகளை இழந்த எங்களுக்கு இலவச வீட்டு மனை கொடுத்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும், குழந்தைகளை படிக்க வைக்கும் வகையில் நிரந்த இருப்பிடத்தை கொடுத்து உதவிட வகையில் இலவச வீட்டு மனை கொடுத்ததை விட தாங்கள் வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வீடுகளை இழந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.