ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் ஆவடி, மோரையில் சிறப்பாக நடைபெற உள்ளது. மாநில பொதுச்செயலாளர் த.கோ.தாயுமானவன் அவர்கள் விழா தொகுப்புரை ஆற்றிட…
செயல் தலைவர்
எஸ். தாமோதரன் அவர்கள் முன்னிலை வகிப்பார்.
அறிமுகவுரை வி.இராஜேந்திரன் அவர்கள் வழங்க உள்ளார்.
பொருளாளர் பி.சுகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்ற உள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் க.பார்த்தீபன் மற்றும் எஸ். கே. எஸ் மூர்த்தி அவர்கள் அணிந்துரை வழங்க உள்ளார்.
சிவக்குமார் அவர்கள் ஏற்புரை வழங்க உள்ளார்.
அமைப்புச் செயலாளர்கள்
அசோகன்,இளங்கோவன், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிரணியனர் கலந்துக் கொள்ள உள்ளனர். பொருளாளர் அச்சுதரமேஷ் அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் அனைத்து கருணீகப்பிள்ளை முன்னேற்ற பேரவையின் நிறுவனத் தலைவர் சரவணன் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
