ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு சார்பில் திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சென்னை : மே, 02
கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் ஏழை. எளிய மற்றும் பலதரபட்ட மக்கள் வாழ்வாதரமின்றி தவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையால் திருநங்கை சமுதாய மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில் வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் (YMCA) அமைப்பினர் சுமார் 100 திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு உண்டான அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவினர்.

மேலும் இந்நிகழ்வில் வேப்பேரி காவல் ஆய்வாளர் நாகராஜ், ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் அமைப்பின் பொது செயலாளர் ஆசிர் பாண்டியன் ஆகியோர் கலந்துக் கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை ஒய்.எம்.சி.ஏ.அமைப்பின் நிர்வாகி ஆனந்த் பாபு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். மேலும் இந்நிகழ்வுக்கு தோழி அமைப்பை சேர்ந்த கலைமாமணி திருநங்கை சுதா மற்றும் சகோதரன் அமைப்பை சேர்ந்த ஜெயா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

மேலும் திருநங்கைகள் சமூக இடைவெளியோடு, முக கவசம் அணிந்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.