எழும்பூர்: சென்னை சமூகப்பணிக் கல்லூரி மற்றும் துணை அறக்கட்டளையுடன் இணைந்து கர்ப்பகால ஆரோக்கியம் என்கிற தலைப்பில் புதிய பாடத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னை சமூகப்பணிக் கல்லூரி வளாக உள் அரங்கில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ இ.ஆ.ப. அவர்கள் (பணிநிறைவு) முன்னிலை வகித்தார்.

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்முதலாக இந்த முதுநிலை பட்டயப் படிப்பு உளவியல், சமூகம் தொடர்பான புதிய பாடத்திட்டம்,
கர்ப்பகால ஆரோக்கியம் என்பது கருவுற்ற நாளிலிருந்து குழந்தை ஓரளவு வளரும் பருவம் வரை தாய் தந்தையரின் உணர்ச்சி மற்றும் உடல் நலத்தைப் பாதுகாக்கும் மருத்துவப் படிப்பு என்றே குறிப்பிடலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் இந்தத் துறை பற்றிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ இ.ஆ.ப. (பணிநிறைவு) அவர்கள் உரையாற்றும் போது இளம் தலைமுறையினர் அனுபவிக்கும் பல்வேறு மன அழுத்தங்களின் விளைவுகள் குறித்து பேசினார்.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து க்கொண்ட எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர்.ரெமா சந்திரமோகன் அவர்கள் கருவுற்ற தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் குப்புலட்சுமி அவர்கள் ஊட்டச்சத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை எடுத்துத்துரைத்து பேசினார்.

ஸ்ருஷ்டி கருத்தரிப்பு மையத்தின் இயக்குநர்கள் டாக்டர்.சாமுண்டி சங்கரி மற்றும் டாக்டர்.திவ்யா சிவராமன் ஆகியோர் மனநலத்தை முதன்மையாகப் பேண வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொன்னதுடன், கருவுற்ற தாய்மார்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த 12 மாத படிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், இப்படிப்பை ஒரு வருட காலத்தில் படித்து முடித்துவிட முடியும், எல்லா பட்டதாரிகளும் இப்படிப்பைத் தொடரலாம் என்று கூறிய துணை அறக்கட்டளை ஸ்மிதா ராஜன் அவர்கள் “இந்த ஆண்டு இப்படிப்பைத் தொடர்வதன் மூலம் முதல் தலைமுறை கர்ப்பகால ஆலோசகர்களாக மாறலாம்” என்று மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உளவியல் நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், துணை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.