அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்( ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் 2 வது “புதிய வாட்டர் கூலர்” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
சென்னை அண்ணாநகர் மேற்கு, தங்கம் காலனி ஓம் மகா கணபதி கோவிலில் இதன் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் ஏற்பாட்டிலும், தங்கம் காலனி நலச் சங்க தலைவர் முத்துசாமி மற்றும் கோவில் குருக்கள் சண்முகம் ஆகியோர் தலைமையிலும், இந்த நலச் சங்கத்தின் உறுப்பினர் கணேசன், ஜெய்சங்கர், தேவதாஸ் மற்றும் வழக்கறிஞர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய வாட்டர் கூலர் திறப்பு விழா சிறப்புற நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 104 வது வார்டு பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டி.வி. செம்மொழி அவர்கள் கலந்து கொண்டு புதிய வாட்டர் கூலரை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர்,மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்,இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்( ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ,கல்லூரி மாணவிகள் உள்பட பலர் உடன் இருந்து தன்னார்வத்தொண்டு செய்தனர்.