குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

சென்னை:இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO)சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஜ.சி.டபிள்.யூ செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

பச்பன் பச்சோ அந்தோலன் மாநில ஒருங்கிணைப்பாளர் நத்தர்ஷா மாலிம் முன்னிலை வகித்தார்.

ரெயில்வே போலிசார் குழந்தை தொழிலாளர்கள் பற்றி துண்டு பிரச்சுரம் மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் தெரு நாடக குழுவினர் குழந்தை தொழிலாளர்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதுமட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடி சென்னைக்கு
பினாகினி மற்றும் சாப்ரா இரயில்களில் வந்த நான்கு சிறுவர்களை ரெயில்வே போலிஸார் உதவியுடன் கூட்டு ஆய்வு நடத்தப்பட்டு நான்கு குழந்தைகளை மீட்டனர்.

மேலும் விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக RPF வழங்கிய மெமோவின்படி சைல்டுலைன் குழு மூலம் அவர்களை CWC க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

BBA, ICWO, சென்னை சென்ட்ரல் RPF, GRP, MMC, BDS, சைல்டுலைன், கருணாலயா, DCPU மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் குழந்தை தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.