உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு!
பாண்டிச்சேரி:
கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண் ஆளுமைகளுக்கு சிங்கப்பெண் விருது -2024 விருதுகள் வழங்கும் விழா ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் வில்லியனூர் பாண்டிச்சேரியில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேவாரத்னா மதிப்புறு முனைவரும், சமூக சேவகருமான சரவணன் அவர்களின் புதல்விகள் ச.சங்கீதப்ரியா மற்றுமா ச.சஹானா ஆகியோருக்கு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியமைக்காக சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

