மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சூளை அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவரும் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.துறை மாநில தலைவருமான எம்.பி.ரஞ்சன்குமார் அவர்கள் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி நீண்ட ஆயுள் பெறவும் அரசியலில் மென்மேலும் வளர சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் P.சுரேஷ்பாபு, A.தன்ராஜ், ஷேக் அப்துல் காதர், விஜயசேகர்,மோகனரங்கம், சூளை இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் மலையராஜா, மாவட்ட துணை தலைவர் புரசை வின்சென்ட், T.L.V.தனலட்சுமி,R.D.குமார், எழும்பூர் சர்க்கிள் தலைவர்கள் வழக்கறிஞர் C.B.நரேஷ்குமார், M.D.சூர்யா வட்ட தலைவர்கள் J.குபேந்திரன்,D.A.செல்வம், G.சுரேஷ்குமார்,M.மன்மதன், M.சேகர்,J.பாலாஜி, எஸ். சி.துறை மாவட்டத்தலைவர் P.ராஜலட்சுமி, மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி ஏழுமலை, G.தேவன்,யவன குமார்,மங்கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு மாவட்ட தலைவர் பா.சந்திரசேகர், துணை தலைவர் சூளை மகேஷ் மற்றும் பொதுச்செயலாளர் புல்லட் K.V.கோபிநாத் ஆகியோர் சிறப்பாக எற்பாடு செய்திருந்தனர்.