மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

கல்லைக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு
கல்லைக்குறிச்சி ராஜா திருமண மஹாலில் இந்த அமைப்பின் நிறுவனர் பொதுச் செயலாளர் முனைவர் என். எஸ்.எஸ்.செல்வராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில்
1.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும். மது உற்பத்திக்கும், புகையிலைப் பொருட்கள் உற்பத்திக்கும் தடை விதிக்கவும். தமிழ்நாடு அரசைகேட்டுக்கொள்வது.
2.மருத்துவ காப்பீடு என்கிற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டு. அப்பணத்தில் நவீன மருத்துவ கருவிகளை நிறுவியும், போதிய மருத்துவர்களை நியமித்தும். அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தியும், ஏழை எளிய மக்களுக்கு தரமான இலவச சிகிச்சை அளித்திட வேண்டும்
உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச்செயலாளர் டி.சக்திவேல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.