சென்னை:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின்(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா,
மாநில குழு உறுப்பினரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ஸ்டெல்லா மேரி,மாநில மனித உரிமை அணி செயலாளர் ஏ.டி.முருகன்,
மாநில ஓபிசி அணி செயலாளர் தமிழ்நெஞ்சன்,வடசென்னை மாவட்ட தலைவர் பாரூக்,
மாவட்ட செயலாளர் சோபியா,
சுரேந்தர்,மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆரிப்,
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சரவணன்.சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.