சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்!

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெரும் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தாம்பரம் நடுவீரப்பட்டி கிராம ஏழை,எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் மூலமாக வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் இதில்
மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பி. கணேஷ் ராஜன் மற்றும் மாநில தலைவர் சரவணன்,மகேஷ் கோபி, ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து அன்றாட தேவைக்கான நிவாரண பொருட்களை வழங்கினர்.