வியாசர்பாடி:
சென்னை P3 புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.கல்யாணபுரம் வியாசர்பாடி பகுதியில் துணைக் காவல் ஆணையாளர் ஈஸ்வரன், உதவி காவல் ஆணையாளர் செம்பேடு பாபு மற்றும் P3 புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருள் மணிமாறன் ஆகியோர் மிக் ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்றாட தேவைக்கான நிவாரண பொருட்களை வழங்கினர்.