திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோரின் லஞ்ச வசூல் வேட்டை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளராக (சூப்பிரண்டு)
பணியாற்றுபவர் சேலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவர் இந்த அலுவலகத்தில் ஒன்றரை வருடங்களாக பணியில் உள்ளார்.

மேலும் திருப்பத்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு புதிய வாகனங்கள் பதிவு எண் பதிவு செய்ய ரூ.100, பழைய இருசக்கர வாகனங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.100, கார் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 500 கனரக வாகனம் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 700 கல்லூரி பேருந்துகளுக்கு ரூபாய் 1000 என வசூல் வேட்டையில் கலக்கி வருவதாக தகவல் தெரிய வருகிறது மேலும் இவர் பண விஷயத்தில் மிகவும் தயாராக உள்ளாராம் பணம் கொடுக்கவில்லை என்றால் எந்த ஆவணமும் இவர் டேபிளில் இருந்து அடுத்த டேபிளுக்கு செல்வதில்லையாம் இவர் தினமும் சேலத்துக்கு சென்று வருகிறாராம் அரசு அலுவலக நேரத்திற்கு வருவதில்லை என்பது இவர் மீது பெரிய குற்றச்சாட்டாக வாகன பதிவிற்கு வரும் நபர்கள் புலம்புகின்றனர்.

மேலும் அலுவலக நேரங்களில் பணியை புறக்கணித்து சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் இதனால் வாகன அலுவல் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகம் வரும் பொதுமக்கள் இவரால் அலைக்கழிக்கப்படுகின்றனர் தங்களுக்கு விரைவாக வேலை முடிய வேண்டும் என்பவர்களை குறி வைத்து இடைத்தரகரை நியமித்து அவர்களிடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு வேலையை முடித்துக் கொடுக்கிறாராம்.

மேலும் இதே அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் இவரும் சேலம் உருக்காலை அருகே சொகுசு பங்களாவில் வசித்து வருகிறாராம் பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிக்க அரசு 2 ஆண்டு காலம் அனுமதி வழங்கி உள்ளது ஆனால் அலுவலகத்தில் வாகனங்களை புதுப்பிக்க வரும் பொது மக்களிடம் இவர் இரண்டு மடங்காக லஞ்சப் பணம் கொடுக்க வேண்டும் என்று கரராக பேசி வசூல் செய்து விடுகிறார் பணம் கொடுக்க மறுத்தால் சான்றிதழ்கள் கிடப்பில் போடப்பட்டு பல மாதங்கள் ஆனாலும் அவற்றை முடித்துக் கொடுப்பதில்லையாம் இவர் கேட்ட பணம் வந்தால் மட்டுமே இவர் மேசையிலிருந்து சம்பந்தப்பட்டவர்களின் ஆவணங்கள் அடுத்த டேபிளுக்கு போகுமாம் இவர் கேட்ட பணம் கொடுக்க மறுத்தவர்களுடைய சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அலுவலகத்தில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மேலும் ஓட்டுனர் உரிமம் பெற பதிவு பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ரூபாய் ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமாருக்கு இடைத்தரகர்களாக மறைமுகமாக வேலை செய்யும் ஞானப்பிரகாசம், பாஸ்கர், திலீபன் ஆகியோரை அணுகினால் ரூபாய் 5000 கொடுத்தால் எல்.எல்.ஆர் போடப்பட்டதும் 30 நாட்கள் கழிந்து சம்பந்தப்பட்ட நபர் வாகனத்தை மோட்டார் வாகன சட்டத்தின்படி இயக்கி காட்ட வேண்டிய அவசியம் இல்லையாம் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு ஓட்டுனர் உரிம அட்டையை பெற்றுக் கொள்ளலாம்
முறையாக போக்குவரத்து விதிமுறைகளை அறியாத பலருக்கு ஓட்டுனர் உரிமத்தை பணத்தைப் பெற்றுக் கொண்டு விஜயகுமார் வழங்கியுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இது போன்ற நபர்களால் சாலைகளில் பெரும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது மேலும் வாகனத் தணிக்கையின் போது சரியான ஆவணங்கள் இல்லாத வாகனத்திடமிருந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக ரூபாய் 5000 முதல் 10 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் பணப்பறிப்பு செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும்
வாகன ஓட்டிகளிடம் பணத்தைப் பறிக்கும் இது போன்ற தவறான அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் இவ்வளவு
முறைகேடுகளையும் ஆர்.டி.ஓ காளியப்பன் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதின் மர்மம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மேலும் இது போன்ற லஞ்ச லாவண்யாத்தில் புரண்டு கொண்டுள்ள ராஜேந்திரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வை பட்டால் அவர்களுடைய அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாம் இது மட்டுமின்றி இவர்களுடைய ரத்த சொந்தங்கள் உள்ள இடங்களிலும் விசாரணை மேற்கொண்டால் லஞ்சப் பணத்தில் சேர்த்துள்ள சொத்துக்களை முடக்க அதிக வாய்ப்புள்ளதாக திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக சுற்று வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

லஞ்சத்தில் புரளும் திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து சூப்பிரண்டு ராஜேந்திரன், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மீதும் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுக்கப்படுமா??? பொறுத்திருந்து பார்ப்போம்…..