சென்னை :
சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மயில்வேல் மற்றும் பிரியா தம்பதியர்களின் இளைய புதல்வி விக்னேஷ்வரி என்கிற இலக்கியா.

இவர் இளம் வயதிலேயே படிப்பு மற்று ஓவியத்தில் நாட்டமிக்கவரும், பள்ளியிலே சிறந்த மாணவி என போற்றுதல் பெற்றவர்.
மேலும் சோசியல் புரோட்டகஷன் அமைப்பில் தன்னை சமூக ஆர்வலராக இணைத்து கொண்டு அங்கு அலுவலக உதவியாளராக இணைந்து தன் பணியினை செவ்வனே துவங்கினார்.
சோசியல்
புரோட்டக்ஷன் அமைப்பின் மூலம் நடைபெற்ற நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்கிற மாபெரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுடன் இனைந்து 2000 பேர் பங்கு பெற்ற நிகழ்வினை சிறப்புற ஒருங்கிணைத்து முதல் சாதனை படைத்தார்.
அதன் பின்பு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக அங்கீகாரம் பெற்று இது வரைக்கும் 100 க்கும் மேற்பட்ட உலக சாதனை நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளார். பள்ளி, கல்லூரி கலைகள் சார்ந்த அமைப்புகள் என சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சாதனையாளர்களை அடையாளபடுத்தியும் வருகிறார்.
அது மட்டுமில்லாது மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தி லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பாராட்டினை பெற்றுள்ளார்.
தன்னுடைய தனி திறமை மற்றும் ஆளுமையை கண்டறிந்து அதற்கான பயிற்சியினை முறையாக பெற்று சரியான தளத்தில் வெளிப்படுத்தும் போது ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு தேசமே பெருமை கொள்கிறது, அடையாளப்படுத்துவது எங்கள் கடமை மற்றும் இயல்பு ஆளுமையாவது உங்கள் திறமை” என நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்களின் கனவினை அடிப்படையாக கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு இலக்கியா அவர்களை பாராட்டுவோம்.

தற்போது சிறகை விரி விண்ணை தொடு, எட்டு திக்கும் பற, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, கலைகள் 100, கலைஞர்கள் 100 ஆகிய நிகழ்வுகளில் அர்ப்பணிப்போடு இயங்கி வருகிறார்.
தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தி, அடையாளம் பெற்று இனம்கான லிங்கன் புக் ஆஃப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற தொடர்பு கொள்ளலாம்: 89394 48877 , 91764 21698, 91507 30374
