தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இளைய மகன் காவல் நிலையத்தில் புகார்: உதாசீனப்படுத்தினாரா உதவி காவல் ஆய்வாளர் காதர் கான்!
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பூபதி இதே பகுதியில் இவருடைய அண்ணன் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு பிரபா என்கின்ற மனைவியும் சரவணன் ஜெயலட்சுமி பிரியா கல்யாணி ஆகிய மகன் மற்றும் மகள்கள் உள்ளனர் பூபதி மற்றும் சிவலிங்கம் ஒரே குடும்பத்தில் உள்ள அக்கா தங்கையை திருமணம் செய்து உள்ளனர் இதில் மாமியார் பெயரில் உள்ள சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைமுறையில் உள்ளது தற்போது 24/10/2023 அன்று மதியம் ஒரு மணி அளவில் பூபதி சிவலிங்கம் இவர்களுடைய தாயார் கிளியம்மாள் என்பவர் மரணம் அடைந்து விட்டதாக பூபதிக்கு தகவல் தெரிய வந்து சிவலிங்கம் வீட்டருகே சென்றுள்ளார்.

அவர் தாயாரை பார்க்க விடாமல் சிவலிங்கம் தனது குடும்பத்தார் மற்றும் ஜெய்சங்கர் மற்றும் சங்கர் ஆகிய நபர்களை வைத்து துரத்தியுள்ளார்கள் மேலும் இதுகுறித்து ஊரார் பலர் சிவலிங்கத்திடம் சொத்து சம்பந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அதற்கும் இந்த இறப்புக்கும் சம்பந்தம் இல்லை பூபதி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு சடங்கை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து ஊரில் உள்ளவர்களையும் சிவலிங்கம் எதிர்த்து பேசியதாகவும் தெரிய வருகிறது இதனால் பூபதி 25/10/2023 மறுநாள் காவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் என் அண்ணன் குடும்பத்தார் என்னை எனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விடாமல் அவரும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய அடியாட்கள் ஆகிய ஜெய்சங்கர் மற்றும் சங்கர் ஆகியோரை வைத்து மிரட்டுவதுடன் அந்த இடத்திலிருந்து ஓடிவிடு என எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர் மேலும் எனது தாயார் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது இயற்கை மரணமா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்கின்ற சந்தேகம் உள்ள காரணத்தினால் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார் ஆனால் இந்த புகார் மீது காவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காதர் கான் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை இதை தொடர்ந்து பூபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் எந்த விசாரணை மேற்கொள்ளாததால் மறுபடியும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பூபதி நாடி உள்ளார் இதனால் இந்த புகாரை ஆலங்காயம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரிக்கும்படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாக தெரிகிறது மேலும் உதவி ஆய்வாளர் காதர் கான் சம்மன் தருவார் அதை கொண்டு வந்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் கொடுக்கும்படி பூபதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பூபதி காவலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் காதர் கானை சந்திக்க முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணங்களை சொல்லி விரட்டி அடிக்கப்பட்டுள்ளார் இந்த புகாரில் எந்த விதமான மர்மமும் இல்லை எனில் ஆலங்காயம் காவல் ஆய்வாளர் விசாரிப்பதில் காதர் கானுக்கு என்ன தயக்கம் ஏன் இவர் ஆய்வாளர் விசாரிப்பதை தவிர்த்து வருகிறார் ஏன் கால தாமதம் செய்து வருகிறார் இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை மேலும் இது குறித்து காவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காதர் கான் அவரை நாம் செல்போனில் தொடர்பு கொண்டு இந்த புகார் குறித்து கேட்டதற்கு
அவர்களுக்கு சொத்து பிரச்சனை இருப்பதாகவும் அது நீதிமன்றத்தில் உள்ளது எனவும் அதற்காக பழிவாங்கவே பொய்யான புகார் கொடுத்துள்ளனர் என கூறினார் மேலும் நாம் கேட்டதோ தாயின் இறுதி சடங்கில் மகனை காண விடாமல் கடைசி கடமையைச் செய்ய விடாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளதை அவர் நம்மிடம் கூறுவதோ சொத்து சம்பந்தமான பிரச்சினை உள்ளது என்று ஆகவே
இவர் புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உங்களுடைய சொத்து பிரச்சனையை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் தற்போது இறந்திருப்பவர் இவருக்கும் தாய் அவருக்கான கடமையை செய்ய விடுங்கள் என இவர் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இந்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று ஆலங்காயம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை வரை வந்திருக்காது என்பதே உண்மை.
மேலும் சிவலிங்கம் என்பவர் பண பலம் ஆளுங்கட்சி அரசியல் பலம் அடியாள் பலம் மிக்கவராகவும் வளம் வருவதாக அப்பகுதியில் கூறுகின்றனர் மேலும் இது போன்ற புகார் மீது மெத்தனமாக செயல்பட்ட காவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்வாரா ?மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுத்திருந்து பார்ப்போம்!
