ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை:உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்க்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர்.
உலகத்தில் வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பை கண்டு அச்சத்தில் உறைந்து நிற்கின்றனர்.
இந்தியாவை பொறுத்த வரை கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 24ம் தேதி முதல் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட்டுள்ளது.இருந்த போதிலும் இந்தியாவில் நோய்தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருகிறது.
தன்னலமன்றி பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது.

நாடு இருக்கும் தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது இன்றியமையாத அவசியம்.
ஏற்கனவே டெல்லி உள்பட சில மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நிலையில்,சென்னையில் நேற்று இளம் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று வந்திருப்பதை உறுதி செய்துள்ளது மிகவும் வேதனையையும். அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் நடத்தப்படும் பத்திரிக்கையாளர் சந்திப்பால் இந்த கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

சென்னையில் பணிபுரியும் இரு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பெரும் செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாக்க காணொலி காட்சி அல்லது அறிக்கை மூலமாக தமிழக அரசு செய்தி நிறுவனங்களுக்கு தரவேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டு கொள்வதோடு, பாதிக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியை அரசு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதே போன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு உரிய பாதுகாப்பை ஏற்பாடு செய்யாமல் பணியாற்றியதின் விளைவாக கொரோனா தொற்றால் மற்ற காவல்துறை நண்பர்களும் பாதிக்கபட்டுள்ளது கவலையளிக்கிறது.

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க இரவு, பகல் பாராமல் பணி செய்து வரும் மருத்துவர்கள் சிலரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது. உலகமே இதுவரை கண்டிராத கண்ணுக்கு தெரியாத எதிரியை அழிக்க போராடி வரும் காவல்துறையினர், மருத்துவ துறையினர், ஊடகவியலாளர்கள் உள்பட இதர பணியாளர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், ஊடகவியலாளர்கள், காவல் துறையினர் உள்பட தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட்டால் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை அரசு உறுதி செய்வதோடு, இவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டுமென அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்தார்.