சென்னை :பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஆர் தனபாலன் அவர்கள் அசோக் நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

