தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மற்றும் தமிழர் அறம் சார்பில் காவிரி நீர் உரிமையில் தண்ணீர் தர மறுக்கும்,தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சுயநல கர்நாடக மற்றும் மத்திய அரசுகளையும் காவிரி நீர் பெற்றுத்தர முடியாத ஆளும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் சக்திவேல் தமிழர் அறம் தலைவர் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.



