தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு

பெரம்பூர் :தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் உள்ளே கொரோனா வெளியே என்ற வாசகங்கள் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி குட்பட்ட, பெரவள்ளுர் சந்திப்பில் உள்ள சாலையில் வரையப்பட்டது.

தமிழ்நாடு ஓவியர்கள் சங்க நிர்வாகிகளான மாநில தலைவர் ஜே.பி கிருஷ்ணா அவர்களின் மேற்பார்வையில் மாநில இணை பொதுச் செயலாளர்கள் பார்த்திபன் மற்றும் பாப்புலர் சேகர்,மாநில ஆலோசகர் V3.சேகர், மாநில பொருளாலர் குப்பன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஹெர்மோன்,பாரதிராஜா,சிவா மற்றும் பெரம்பூர் பகுதி நிர்வாகி மாரிராஜ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் இந்த விழிப்புணர்வு ஒவியம் சுகாதார மற்றும் மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும் பத்திரிக்கை மற்றும் ஊடக துறை யினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஒவியம் வரையப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.