தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி!
தேனி:
தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் ‘இந்திய பெண்களின் வரலாறு’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் அரங்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வரலாற்று துறைத் தலைவர் ஜி.சாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கல்லூரியின் செயலாளர் கே.எஸ்.காசிபிரபு மற்றும் முதல்வர் எஸ்.சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர்.

துணை முதல்வர்களான கோமதி மற்றும் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் இந்நிகழ்வில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சுதந்திர போராட்டம், மருத்துவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றில் சாதித்த பெண்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக கருத்துரை ஆற்றினார்.

இறுதியில் இக்கல்லூரியின் வரலாற்றுத் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜெ.சிவ ஐஸ்வர்யா நன்றியுரை நல்கினார்.


