சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்ற வளாகங்களில் அகற்ற கோரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டி அறவழிப் போராட்டம்!

சென்னை:தமிழ்நாடு நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை அகற்ற கோரிய சுற்றறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்று, அம்பேத்கர் அவர்களின் புகைப்படங்களை மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறுவக் கோரி சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் பாலகம் முன்பு அறவழிப் போராட்டம் நடைப்பெற்றது.

இதில் சனநாயக மனப்பான்மை கொண்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் இறுதியில் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஜெய் பீம் கோஷங்கள் முழங்க மலர்களை தூவி மரியாதை செய்தனர்.