சென்னை:தலித் அரசியலை அழுத்தமாக பேச இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு அளித்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் ராஜ விக்ரமன் தெரிவித்தார்.
மேலும் தனது அறிக்கையில் கூறுகையில், ஜாதிவெறிக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பன்றிகள், பெரியார் சிலை, அம்பேத்கர் என படம் நெடுகிலும் அழுத்தமான மற்றும் ஆழமான குறியீடுகள் இருப்பது அருமை. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த மண்ணில் சமூக நீதிக்கான உரிமைக் குரலை எவ்வித சர்ச்சைளுக்கும் இடம் கொடுக்காமல் திரைப்படமாக தயாரித்து, நடித்து வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்டுகிறேன் என்றும், ஒடுக்குமுறைக்கு உள்ளாவோரும் சில நேரம் பதில் தாக்குதலில் இறங்க வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருந்தாலும் “மாமன்னன்” திரைப்படத்தில் வன்முறை பெருமைப்படுத்தப்படாதது சிறப்பு,
ஜனநாயக வழியில் அர்ப்பணிப்புடன் போராடினால் சமூக ஏற்றத் தாழ்வுகளிலிருந்து விடுபட்டு மேம்பட முடியும் என்னும் நம்பிக்கையை ஒவ்வொரு இளைஞர்களின்
மத்தியில் விதைத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
