ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சங்கக்கூட்டம்!

திண்டுக்கல் :
ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சங்க கூட்டம் கோ. சுப்புலட்சுமி
அவர்கள் தலைமையிலும்.எஸ். விஜயா மற்றும் ஆர். சத்தியவாணி ஆகியோர் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி நியமனம் செய்தமைக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், ஏனைய ஆர்.சி. ஹெச்.தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் மாவட்ட பொருளாளர் ஜெ. ஜெயபாரதி அவர்கள் நன்றியுரை நல்கினார்.