ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட சங்க பேரவைக்கூட்டம்!சேலம்:ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட சங்க பேரவைக்கூட்டம்
வாழப்பாடி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் சேலம் நல்லம்மாள் அவர்கள் தலைமையிலும். சிறுவாச்சூர் கலைச்செல்வி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி நியமனம் செய்தமைக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், ஏனைய ஆர்.சி. ஹெச்.தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் சங்ககிரி மாதேஸ்வரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.