திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் உலக கேரம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்- பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு!

பெரம்பூர்:
திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் உலக கேரம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்- பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூர் பாரதி ரோட்டில் உள்ள உலக கேரம் பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது.

தேசிய வீரரும்,
திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கத்தின் பொதுச் செயலாளரும்
தமிழ்நாடு கேரம் சங்கத்தின்
துணை பொதுச் செயலாளருமான ச.சக்திவேல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.


உலக கேரம் சாம்பியன் ச.இளவழகி அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும்
4வது அன்னை
எலிசபெத் நினைவு கேரம் போட்டியில் சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற 14 வெவ்வேறு பிரிவுகளில் (Under-10 cadet, Under-12 Cadet, Under-12, Under-14, Junior, Youth, Non Medalist Singles, Open Singles & Open Doubles) கடந்த 15 தினங்களாக நடைபெற்றது.

இப்போட்டிக்கான இறுதி போட்டிகளை தொடர்ந்து 4வது அன்னை எலிசபெத் நினைவு கேரம் போட்டிக்கான பரிசளிப்பு விழா மற்றும் சந்தானம் நினைவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நிகழ்வில்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட
தேசிய கேரம் வீரரும்
தமிழ்நாடு கேரம் சங்கத்தின் மண்டல செயலாளருமான பி. வின்சென்ட், தேசிய கேரம் வீரரும்,தமிழ்நாடு கேரம் சங்கத்தின்
ஆலோசகருமான சி. விஜயராஜ்,திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கத்தின் தலைவர் எஸ். கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும்
வெற்றி பெற்ற அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் 33000 வரையிலான ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இதில்
திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கடந்த மாதம் விருதுநகரில் நடைபெற்ற YOUTH CARROM STATE CHAMPIONSHIP போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற திருவள்ளூர் மாவட்ட கேரம் வீரர் டி.எஸ்.சூரியா அவர்களுக்கு ஊக்க தொகையாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

மேலும், இம்மாபெரும் போட்டிகளை நல்ல முறையில் நடத்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்று தந்த உலக கேரம் பயிற்சி மையத்தின் நிர்வாகி ச. சக்திவேல் அவர்களுக்கு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கள் நன்றிகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.