சென்னை அயனாவரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் அருகில் உள்ள விளையாட்டு திடலில் k2 அயனாவரம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி பயிற்சி, விளையாட்டு மற்றும் மாலை நேர வகுப்புகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில்,அங்குள்ள கணினி பயிற்சி மையத்தை அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி உதவி செயற்பொறியாளர் கணினி மையத்தை இடிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கணினி பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்கள் பேசுகையில் ஏழை மாணவர்களான நாங்கள் இந்த மையத்தின் மூலம் இலவசமாக கணினி பயிற்சியை பெற்று வருவதாகவும், அதனை தற்போது அகற்ற போவதாக கூறி வருகிறார்கள். ஏழை மாணவர்களான தங்களால் பணத்தை செலுத்தி கணினி பயிற்சியை பெற முடியாது.

எனவே இந்த மையத்தை அகற்றக்கூடாது என தமிழ்நாடு முதல்வருக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்…