கிண்டி:சென்னை கிண்டியில் உள்ள ரமடா பி ஆர் கிராண்ட் நட்சத்திர விடுதியில் எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில் சேவையை எஸ் ஆர் எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து அறிமுகம் செய்து வைத்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ் ஆர் எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து
55 ஆண்டுகளாக கல்வி, மருத்துவம் ,பயணிகள் போக்குவரத்து என சேவை சேவை துறைகளில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் நிறுவனம் தற்போது ரயில்வே துறையிலும் கால் பதித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நெருக்கமான திட்டமான பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் எஸ் ஆர் எம் குழுமம் 4 ரயில்களை நாடு முழுவதும் உள்ள ஆன்மீகம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு இயக்க உள்ளதாக தெரிவித்தார்.

எஸ் ஆர் எம் குழுமம் டாக்டர் பாரிவேந்தர் அறிவுறுத்தலின் பேரில் எஸ்ஆர்எம் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில் ரயில்வே துறையிலும் கால் பதிக்க வேண்டும் என்பது தங்களது குடும்பத்தின் கனவானது தற்போது நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.
எஸ் ஆர் எம் குடும்பத்தின் சார்பில் இயக்கப்படக்கூடிய இந்த சுற்றுலா ரயில்களில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் இலவச வைபை சிசிடிவி கேமரா கண்காணிப்பு ஒரு பயணிகள் விரும்பக்கூடிய நட்சத்திர விடுதிகளில் சுற்றி பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை பல்வேறு பேக்கேஜ்களாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
14 பெட்டிகள் கொண்ட ரயிலில் 700 பயணிகள் வரை பல்வேறு குழுக்களாக பயணம் செய்ய முடியும் எனவும் மேலும் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளின் உள்புறமும் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் பெட்டிகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பிற நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வரும் மருத்துவ சுற்றுலா திட்டத்திலும் எஸ்ஆர்எம் குழுவும் ஈடுபட இருப்பதாகவும் தற்போதைய இந்த ரயில் சேவைகள் நடுத்தர மக்கள் விரும்பக் கூடிய வகையில் சுத்தமாகும் சுகாதாரமான உயர்தர உணவுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு சுற்றுலா தலங்களில் எஸ்ஆர்எம் குடும்பத்தின் சார்பிலான இந்த நான்கு ரயில்களும் ஐந்து ஆண்டுகள் வரை இயக்க இருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் இருந்து ஷீரடி, காஷ்மீர் குலுமணாலி, நியூ டெல்லி கமாக்யா சண்டிகார் ஹைதராபாத் மைசூர் அயோத்தியா வாரணாசி என்ன பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில்வே சேவை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்
இந்த விழாவின் போது எஸ் ஆர் எம் குழும இயக்குனர் அனந்த கிருஷ்ணன் எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில்வே நிறுவனத்தின் பொது மேலாளர் கணபதி சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
