ரூபிக் கியூப் விளையாட்டில் அசத்தும் ஆறு வயது அசாத்திய சாதனை சிறுவன் அபிமன்யு !

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அபிமன்யு 6மணி நேரம் 35 நிமிடங்கள் ஒரே இடத்தில் இருந்தவாறு 600 திருக்குறள்களை கூறியவாறு 600 ரூபிக் கியூப் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாக தனி ஒருவராக கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை வைத்து கலைஞரின் உருவப்படத்தை வரைந்து அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

முளையும் பயிர் இளமையிலேயே தெரியும் என்பது போல சிறுவன் அபிமன்யூவின் திறமையை கண்டறிந்த அவரது பெற்றோர்களான சதீஷ்குமார் மற்றும் வளர்மதி ஆகியோர் ரூபிக் கூயூப் பயிற்சிக்காக கோயமுத்தூரில் செல்வன் சனத் தீபக் 10 வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஆகஸ்ட் 2022ல் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து விட்டார்கள்.. செல்வன் சனத் தீபக் ராம் அபிமன்யுவை ஊக்க படுத்தி 4 விதமான ரூபிக் கூயூப்புகளை ஒரே மாதத்தில் கற்றுக் கொள்ள பயிற்சி அளித்தார். ரூபிக் கூயூப்புகளை பயன்படுத்தி உருவப்படம் வரைந்து சாதனை முயற்சி செய்ய வேண்டும் என்று அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கியூப் அசோசியேசனில் சேர்த்து ரூபிக் கியூப் என்ற அறிவு சார்ந்த விளையாட்டை கற்றுக்கொள்ள வழிவகை செய்தனர். தமிழ்நாடு கியூப் அசோசியேசன் பொருளாளரும் உருவ படம் பயிற்சியாளருமான ஆனந்த் என்பவரது வழிகாட்டுதலில் அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் சிறுவன் அபிமன்யூ தனது அதீத புத்திக் கூர்மையால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது அசாத்தியமான திறமையினால் ரூபிக் கியூப் விளையாட்டில் அசத்தி வரும் சிறுவன் அபிமன்யுவுக்கு
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மகாத்மா காந்தி சிலையை பரிசளித்தது முதல் சாதனை ஆகும்.

அதனை தொடர்ந்து
150 திருக்குறள் சொல்லி கொண்டே மனக்கணக்குகளுக்கு விடைகள் போட்டு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் விருது பெற்றது இரண்டாவது சாதனை.

300 திருக்குறள்கள் சொல்லிக் கொண்டே மனக்கணக்குகளுக்கு விடைகள் போட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் விருது பெற்றது மூன்றாவது சாதனை.

500 திருக்குறள்கள் சொல்லி கொண்டே 778 ரூபிக் கியூப்பை பயன்படுத்தி 8 மணி நேரம் 45 நிமிடங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களின் உருவப்படம் வரைந்தது
நான்காவது சாதனை ஆகும்.

தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள சொக்கநாதபுரம் அரசு பள்ளியிலுள்ள 133 மாணவர்களுக்கு இலவசமாக ரூபிக் கியூப் பயிற்சி அளித்து அவர்களையும் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்தது அபிமன்யுவின் ஐந்தாவது சாதனை ஆகும்

40 திருக்குறள்கள் சொல்லி கொண்டே கண்களை கட்டிக் கொண்டு 6 விதமான ரூபிக் கூயூப் வண்ணங்களை 1 நிமிடம் 55 வினாடிகளில் வடிவமைப்பு செய்து வேர்ல்டு ஓய்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

சிறுவன் அபிமன்யுவின் திறமையை பாராட்டி தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கம் தலைவர்கள் பல விருதுகளை வழங்கியுள்ளனர்.குறிப்பாக குறள் செல்வன் விருது,இளம் கவின்மணி விருது,அருங்குறட் செல்வன் விருது, பல்கலைச் செல்வன் விருது, சிறந்த சொற்பொழிவாளர் விருது, Young Hero Award, திறனறி நட்சத்திரம் விருது, இளம் பயிற்சியாளர் விருது,குறள் நெறி சேவை செம்மல் போன்ற விருதுகளை
பெற்று இருக்கிறார்.

தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வமுள்ள சிறுவன் அபிமன்யு. சிறுவர் நீதிக் கதைகள் மற்றும் கல்விச் சிறப்பு, அம்மா சிறப்பு, மரங்களின் சிறப்பு போன்ற பல தலைப்புகளில் உரையாடி மேலும் பல விதமான விருதுகளை வென்று இருக்கிறார்.

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி மாதம் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி 6மணி நேரம் 35 நிமிடங்கள் ஒரே இடத்தில் இருந்தவாறு 600 திருக்குறள்களை கூறியவாறு 600 ரூபிக் கியூப் மூலம் கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை வைத்து கலைஞரின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார் சிறுவன் அபிமன்யு.
நாட்டிலுள்ள முக்கிய தலைவர்களின் உருவப்படங்களை ரூபிக் கியுப் வண்ணங்களால் வடிவமைப்பு செய்திட தயாராகி வருகிறார் சாதனை சிறுவன் அபிமன்யு.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

(யுகம் நியூஸ்)