சென்னை சமூகப்பணி கல்லூரியில் கரலப்பாக்கம் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடைந்த தையற்கலை பயிற்சி வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நிகழ்வு!

சென்னை:சென்னை சமூகப்பணி கல்லூரியில் கரலப்பாக்கம் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடைந்த தையற்கலை பயிற்சி வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நிகழ்ச்சி
கல்லூரி வளாக அரங்கத்தில் நடைப்பெற்றது.

மேலும் சென்னை சமூகப்பணி கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்லூரியின் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரலப்பாக்கம் பஞ்சாயத்தில் கடந்த 30 மார்ச் 1979 ஆம் ஆண்டு கிராம வளர்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவதாகும்.

இதன் துவக்கமாக பள்ளி சிறுவர்களுக்கு மாலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு
வருகிறது.கிராம புற மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கால சூழ்நிலையின் அடிப்படை தேவைகளுக்கு ஏற்றபடி நடத்தப்பட்டு
வருகிறது மற்றும் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.கிராம புற மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கால சூழ்நிலையின் அடிப்படை தேவைகளுக்கு ஏற்றபடி நடத்தப்பட்டு
வருகிறது மற்றும் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

தற்போது தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக தையற் கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 20 மாணவிகள் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் திட்ட ஆலோசகர் முனைவர். சாரா கருணாகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் துறை பேராசிரியை மஞ்சுளா அவர்கள் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவரும்,ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரியுமான கே.ஏ மேத்யூ, செயலாளர் முத்துக்குமார் தானு, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராஜா சாமுவேல், டீன் முனைவர் ஆர். சுபாஷினி, ,திட்ட வல்லுநர் முனைவர் ஜெய் ஸ்ரீ ,தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் சேவியர் அல்போன்ஸ், அர்பனா பவுண்டேசன் அறங்காவலர்கள் அனுஜ் எஸ். கிருஷ்ணன்,முகம்மது அப்துல்லா ,திட்ட ஒருங்கிணைப்பாளர் டேனியல் பிரவீன் ராஜ் உள்பட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முனைவர் சாரா கருணாகரன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.