திருக்குறளின் மூலம் ரூபிக் கூயூப் பயன்படுத்தி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது சிவகங்கை சிறுவன் அபிமன்யு!

சென்னை: சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் ஊராட்சி, முத்தனங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் குமார் மற்றும் வளர்மதி தம்பதியினர். இவர்கள் தற்போது வேலை நிமித்தமாக சென்னை ராமாபுரம், செல்லம்மாள் நகர் முதல் தெருவில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் 5 வயது நிரம்பிய மூத்த மகன் அபிமன்யு அமிர்தா வித்யாலயா என்கிற தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் சிறுவன் அபிமன்யு திருக்குறள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.
வித்தியாசமாக உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் 500 திருக்குறள்களை சொல்லி கொண்டே, 778 ரூபிக் கூயூப்பை பயன்படுத்தி, 5.5 அடி நீளம் மற்றும் 5.5 அடி அகலத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களின் உருவப்படத்தை தொடர் விடா முயற்சியுடன் 8 மணி நேரம் 45 நிமிடங்களில் தத்ரூபமாக உருவாக்கி புதிய உலக சாதனை முயற்சி செய்து கலாம் புக் ஆஃப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்த புதிய உலக சாதனைக்கு இவரின் பெற்றோர் பெரிதும் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் அபிமன்யுவின் உலக சாதனையை வாழ்த்த நினைப்பவர்கள்
91 76 04 54 20 வாழ்த்தி ஊக்கப்படுத்தலாமே….(யுகம் நியூஸ்)