இந்து அறநிலையத்துறைக்கு சமூக சேவகர் வேண்டுகோள்

சென்னை:கடவுளை தரிசித்து நின்று நிதானமாக வேண்டிவர வேண்டும் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக அரசுக்கு வரிசெலுத்தும் மக்கள் அரசு அறநிலையயத்துறைஅறநிலையயத்துறை கோவில்களுக்கு பக்தியுடன் பலநாட்கள் விரதம் இருந்து தேடி வருகின்றனர்.

ஆனால் இறைபக்தர்களை கடவுளை உடனடியாக தரிசிக்க விடாமல் பணக்காரர்கள், ஏழைகள் என்று தரம் பிரித்து பணம் அதிகமாகக் கொடுப்பவர்களை மட்டும் சினிமா டிக்கெட் கொடுப்பது போன்று டிக்கட் கொடுத்தும், ஆன்லைனில் புக்கிங் செய்தும், அதிகமாக பணம் பெற்றுக் கொண்டு நேரடியாக அனுப்புவது வேதனைக்குரியது.

மேலும் பணம் இல்லாதவர்களை இரும்பு கம்பி, தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை சுற்றி, சுற்றி செல்லச் செய்து ஐந்து நிமிடத்தில் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சுற்றிச் சென்று கடக்கச் செய்து பக்தர்களின்பக்தர்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்தும், கால தாமதத்துடன் செல்லச் செய்தும், அலைக்கழித்தும் கடவுளை ஒரு நிமிடம் கூட பார்க்க விடாமல் வேண்டுதலுக்கு அனுமதிக்காமல் பிடித்து தள்ளி விட்டும் அடக்கு முறைகளை கையாள்வது மாபெரும் மனிதநேயமற்ற செயல்களாகும்.

நமது இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாடுகளிலும் இந்த மனிதநேயமற்ற செயல்களை கடைபிடிப்பதில்லை என்பதனையும் உங்கள் முன்வைத்து சுதந்திர இந்தியாவில் இந்தியர்களுக்கு சுதந்திரமற்ற மனிதநேயமற்ற செயல்கள் இனியாவது செய்ய வேண்டாம் என்று இந்தியர்களுக்கு கோவில்களில் முழு சுதந்திரம் அளித்து நடைபாதை தடுப்புச் சுவர்களை அகற்றி முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு அறநிலையத்துறைக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அன்புடன்
சமூகசேவகர் LORDS டாக்டர் ம.பால்ராஜ்
International President & Founder
LORDS CLUBS INTERNATIONAL LORDS CLUBS INTERNATIONAL
Govt. Reg. No. : 1359/2013
Web : www.lordsclubs.com
E-mail : lordsclubsinternational@gmail.com
Ph : +91 9840559673 | +91 9790855633