சென்னை:அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 75வது சுதந்திர தின விழா அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் ஏ. எஸ். மன்சூர் சுபான் அவர்கள்
தலைமையில் பாடி, மதியழகன் தெருவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் டாக்டர் டி. கே. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மூவர்ண கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார்.

மேலும் மதியழகன் நகர், காந்தி தெருவில் ஆனந்தி அவர்களுடைய ஏற்பாட்டில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வழக்கறிஞர் சுருளிராஜன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அரசு வழக்கறிஞர்
பாடி சம்பத் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளான வழக்கறிஞர்கள் கதீஸ்வரன், முகம்மது ரஃபி, சரீப், ஜேம்ஸ், ஆனந்தன், ஸ்ரீனிவாசன், பெஞ்சமின், கார்த்திகேயன், சரவணன் மற்றும் முல்லைவேந்தன், பாலாஜி, சுரேஷ்,குமரவேல், ஹரி, ராஜேஷ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

