திருவல்லிக்கேணி: அ.தி.மு.க.தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க.தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக
செயலாளர் முனைவர் எம். வி. சதீஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் மூவர்ண தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார்
மேலும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வின் இறுதியில்
50 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட, வட்ட கழகத்தினர் மற்றும் தொண்டர்கள் திறளாக கலந்துக் கொண்டனர்.

