சென்னை:தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவு பெற்று புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு பேருரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியான கருத்தரங்கில் கலந்துக்கொண்ட தொழில்துறை அமைச்சர் த. மோ. அன்பரசன் அவர்கள் சிறந்த புத்தொழில் காப்பகங்களுக்கான விருதினை வழங்கினார்.

இந்த சிறப்பான நிகழ்வில் மேட்டுப் பாளையம் வேளான் வணிக மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த வணிக மேலாளர் காயத்ரி மற்றும் வாடிக்கையாளர் சேவை அலுவலர் சிந்து ஆகியோர்களுக்கு சிறந்த புத்தாக்க தொழில் காப்பகங்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.